youtube உள்ள எனது நேர்காணலின் ஏழு பகுதிகளுக்கான இணைப்புகள் இவை
https://www.youtube.com/watch?v=rvSrAk1cJM8 Part 1
https://www.youtube.com/watch?v=XJFGE_nbcZs Part 2
https://www.youtube.com/watch?v=ZaxK6Nhz6kA Part 3
https://www.youtube.com/watch?v=vZ3kormDsEI Part 4
https://www.youtube.com/watch?v=UTIefcrWq4Q Part 5
https://www.youtube.com/watch?v=7AfUg1PDrUM Part 6
https://www.youtube.com/watch?v=YaXZpPae0w8 Part 7
**
நேற்று ஷாஜியின் புத்தக உரையாடல் நிகழ்வில் இயக்குனர் மணி ரத்னம் அவர்களைச் சந்தித்தேன், மாறாத எளிய புன்னகை, வார்த்தைகளை எண்ணிச் செலவிடும் அவரது இயல்பு, மேடையில் அவர் பேசிய ஐந்து நிமிசப் பேச்சினுள் இயல்பாக வெளிப்பட்ட கேலி மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது, வெனிஸ் திரைப்பட விழாவில் இயக்குனர் மணிரத்னம் பெற்றுள்ள விருது தமிழகமே கொண்டாட வேண்டியது.
Jaeger-Le Coultre Glory Filmmaker Award விருதைப்பெறும் முதல் இந்திய இயக்குனர் இவரே, முன்னதாக இந்த விருதை ஜப்பானின் டகாசி கிடானோ, ஈரானின் அபாஸ்கிராஸ்தமி போன்ற முக்கிய இயக்குனர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனருடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது.
நேற்றைய நிகழ்வில் பிரபஞ்சன் பேசியது ஆகச்சிறப்பாக இருந்தது, நல்ல இலக்கிய உரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி பேச்சாளர் பிரபஞ்சன்.அவரது உரைகள் தனித்து சிடி மற்றும் புத்தகங்களாக வெளிவர வேண்டியவை.
மதுரையில் எனது புத்தக வெளியிட்டு நிகழ்வில் அவர் நிகழ்த்திய உரையால் அரங்கமே மிகுந்த உற்சாகம் கொண்டது, சிறப்பான பேச்சது, இன்று வரை அதைப்பற்றி எனக்கு மின்னஞ்சல்கள் வந்தபடியே உள்ளன.
**
பெங்களுரில் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்றுகிழமை அங்கு வருவதாக உள்ளேன், ஒரு நாள் முன்னதாக அக்டோடபர் 2ல் வந்துவிடுவேன், ஆகவே விருப்பமுள்ள நண்பர்களைச் சந்தித்துப் பேச ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யத் திட்டமிடுகிறேன். இடம் நேரம் குறித்து முடிவானதும் தெரியப்படுத்துகிறேன், விருப்பமான நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பினால் ஏற்பாடு செய்ய உதவியாக இருக்கும்
**
விகடன் பிரசுரம் எனது சிறிது வெளிச்சம் புத்தகத்தை மிக நேர்த்தியாக கடின அட்டையுடன்.அழகான ஒவியங்களுடன் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள், விலை, Rs 180. பதிப்பு குழுவிற்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
விகடன் பதிப்பக முகவரி.
விகடன் பிரசுரம்
757 அண்ணாசாலை, சென்னை. 600002 தொலைபேசி 0444-2634283
**
கடந்த நான்கு நாட்களாக எனது கணிப்பொறி பழுதடைந்து போனதால் எதையும் படிக்கவோ உள்ளீடு செய்யவோ முடியவில்லை.புதிய கணிணி வந்துவிட்டது. இனி தொடர்ந்து எழுதுவேன்.
**