நேற்று பாண்டிச்சேரியில் பிரபஞ்சன் – 55 முழுநாள் கருத்தரங்கிற்கான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் மனுஷி பாரதி மற்றும் நண்பர்கள் ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்கள். மாலையில் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அதில் என்னோடு நண்பர் பவா செல்லதுரை மற்றும் பதிப்பாளர் வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மகிழ்வூட்டும் சந்திப்பாக அமைந்தது.
நண்பர் இளவேனில் சிறப்பான இரவு உணவு தந்து அனுப்பி வைத்தார். இளவேனிலின் புகைப்படங்களைக் காணுவதற்காக இன்னொரு முறை தனியே பாண்டிச்சேரி வரவேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்
