புதிய புத்தகங்கள்

எனது புதிய நாவல் சஞ்சாரம் உயிர்மை பதிப்பக வெளியீடாகச் சென்னை புத்தகக் கண்காட்சியினை ஒட்டி வெளியாக உள்ளது.

***

2005 முதல் 2013 வரையான எனது சிறுகதைகள் ஒன்றாகத் தொகுக்கபட்டு எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்- தொகுதி 2 ,    உயிர்மை பதிப்பக வெளியீடாக வர உள்ளது.

***

ஜுனியர் விகடனில் நான் எழுதி வந்த உணவு யுத்தம் விகடன் பிரசுர வெளியீடாக இம்மாதம் வெளியிடப்பட இருக்கிறது

***

பூவுலகின் நண்பர்கள் எனது இரண்டு புத்தகங்களைச் சென்னை புத்தகக் கண்காட்சியினை ஒட்டி வெளியிட இருக்கிறார்கள்.

1)            ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது

2)            புல்லினும் சிறியது

***

0Shares
0