புத்தகக் கண்ணாடி

சென்னையில் நடைபெற உள்ள 36வது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சன்நியூஸ் தொலைக்காட்சியில் புத்தகக் கண்ணாடி என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினைத் தொகுத்து அளித்திருக்கிறேன்

இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் சிறப்பம்சங்கள் எவை, இளைஞர்களிடம் புத்தகம் படிக்கிற பழக்கம் குறைந்து வருகிறதா, பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றும் வாசிக்கபடுகிறதா, குழந்தைகள் இலக்கியம் புறக்கணிக்கபடுவது ஏன், இணையத்தின் வருகையால் புத்தக வாசிப்பு  குறைந்து வருகிறதா, தொடர்கதைகள் படிக்கும் பழக்கம் தொடராமல் போனது ஏன்,  என்பது போன்ற பல்வேறு விவாதப்பொருளை முன்வைத்து எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுடன் விவாத அரங்கும், இது குறித்த மக்கள் கருத்துகளும் இடம் பெற உள்ளன.

தினசரி இரவு 7 மணிக்கும், மறுஒளிபரப்பு பகல் 12 மணிக்கும் ஒளிபரப்பு ஆக உள்ளது

ஜனவரி 10 இரவு  7 மணியில் இருந்து இந்த நிகழ்ச்சி ஒருவார காலத்திற்கு ஒளிபரப்பு ஆக உள்ளது

••••

0Shares
0