புத்தகத் திருவிழா

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஆனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. தேர்ந்த வாசகர்களே வருகிறார்கள்.  புத்தகங்களைத் தேடி வாங்குகிறார்கள்.

சென்ற ஆண்டு நான் ஷார்ஜா புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அங்கே தமிழ் புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை அறிந்து அது குறித்து விரிவான கட்டுரை ஒன்றை தி இந்து நாளிதழில் எழுதியிருந்தேன். அந்தக் கோரிக்கையை ஏற்று  இந்த ஆண்டு பபாசியில் இருந்து ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் அரங்கு அமைக்கிறார்கள். அதற்குத் தேவையான உறுதுணையைச்  செய்து கொடுத்தேன்.  அமீரகத்தில் வாழும் தமிழர்கள் ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகங்களை வாங்கி உற்சாகப்படுத்துங்கள்.

மதுரையில் ஆகஸ்ட் 31 முதல்  துவங்கவுள்ள புத்தகத்திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைக்கிறது. மூன்று அல்லது நான்கு நாட்கள் மதுரையில் இருப்பேன்.

0Shares
0