உயிர்மை பதிப்பகம் நடத்தும் எனது ஐந்து புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற உள்ளது,
இந்த விழாவின் ஒரு பகுதியாக ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே என்ற எனது சிறுகதையின் நாடகவடிவம் நடைபெற உள்ளது, இதைத் தியேட்டர் லேப் சார்பில் இயக்குபவர் ஜெயராவ்.
புத்தக வெளியீட்டில் திரு. R.பாலகிருஷ்ணன் IAS, எஸ்.ஏ.பெருமாள், முனைவர் பர்வீன் சுல்தானா, முனைவர்.ராமகுருநாதன், கபிலன்வைரமுத்து, டாக்டர் ராமானுஜம், பேராசிரியர் மாடசாமி, ஆகியோர் உரையாற்ற இருக்கிறார்கள்,
அன்று இரவு 7 .45 க்கு மகாத்மா காந்தி ஒரு மகத்தான எழுத்தாளர் என்ற தலைப்பில் காந்தியின் சத்தியசோதனை மற்றும் பல்வேறுவகையான கட்டுரைகள், ஆய்வுரைகள், எழுத்துகளைப் பற்றி தனித்த உரை நிகழ்த்த இருக்கிறேன், இது காந்தியின் எழுத்து ஆளுமையைக் கொண்டாடும் உரையாக அமையும்.
வெளியிடப்படும் புதிய புத்தகங்கள்
- புத்தனாவது சுலபம் : சிறுகதைத்தொகுப்பு
- எனதருமை டால்ஸ்டாய் : உலக இலக்கிய ஆளுமைகள்
- கூழாங்கற்கள் பாடுகின்றன : ஜென் கவிதைகளினூடே ஒரு பயணம்
- பேசிக்கடந்த தூரம் : நேர்காணல்கள், கேள்வி-பதில்கள்
- எஸ். ராமகிருஷ்ணன் எழுத்துலகம் : விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு
••