டிசம்பர் 25 மாலை எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய இளைஞர்கள். திருப்புகழ் ஐஏஎஸ் நூல்களை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்தினார். கவிஞர் ஷங்கர ராம சுப்ரமணியன் குற்றமுகங்கள் குறித்து செறிவான உரையை நிகழ்த்தினார். இந்த உரை அகல் இணைய தளத்தில் தனிக்கட்டுரையாக வெளியாகியுள்ளது
நிலக்கோட்டை ஸ்ரீதர் எனது சிறுகதைகள் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.
நிகழ்வில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட கெஞ்சிக்கதை நாவல் குறித்து நான் உரையாற்றினேன்.













எழுத்தாளர்களின் புகைப்படங்களைக் கொண்ட காலண்டர் ஒன்றை நூலக மனிதர்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி பொன். மாரியப்பன் வெளியிட்டுள்ளார். இதில் மாதவாரியாக எழுத்தாளர்களின் பிறந்த நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாள்காட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாரியப்பன் தொடர்ந்து செய்துவரும் இலக்கியப் பணிகள் மிகுந்த பாராட்டிற்குரியது.

நிகழ்வினை பதிவுசெய்து இணையத்தில் பகிர்ந்து கொண்ட ஸ்ருதி டிவிக்கும், கபிலன் சுரேஷ் உள்ளிட்ட நண்பர்களுக்கும் எனது அன்பும் நன்றியும். நிகழ்வினைச் சிறப்பித்த பத்திரிக்கையாளர்கள். ஊடக நண்பர்கள். எழுத்தாளர்கள். வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. பரிசு வழங்கி கௌரவித்த டாக்டர் பவானி உள்ளிட்ட நண்பர்களுக்கு அன்பும் நன்றியும்.
விழாவிற்கு உறுதுணை செய்த தேசாந்திரி பதிப்பகத்தின் அன்புகரன். மணி, கண்ணகி, நூல் வனம் மணிகண்டன், குரு, கவிக்கோ மன்ற நிர்வாகிகள், உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி