இத்தாலிய நியோ ரியலிசத் திரைப்படங்கள் துவங்கி சமகால சர்வதேச திரைப்படங்கள் வரையிலான சினிமா கட்டுரைகளின் தொகுப்பு மஞ்சள் தருணங்கள்.

ஒவ்வொரு பண்பாட்டிற்கும் அதற்கென சொந்தக் குரல் உள்ளது. அது இலக்கியத்தில் மட்டுமின்றி திரைப்படங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது. ஆகவே சர்வதேச திரைப்படங்களைப் பார்ப்பது பல்வேறு சமூகங்களை, கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் உலகளாவிய அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.
ஹாலிவுட் சினிமாவிற்கு வெளியே இயங்கும் திரைப்பட ஆளுமைகளையும், அவர்களின் தனித்துவமிக்க திரைப்படங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கான எளிய அறிமுகத்தை இந்த நூல் வழங்குகிறது.
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் இந்த நூல் பற்றிய அறிமுகம் இடம்பெற்றுள்ளது

இந்த நூலை சென்னை புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் பெற்றுக் கொள்ளலாம்

