முகாம்- அறிவிப்பு

டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் வம்சி பதிப்பகத்துடன் இணைந்து மே 16 மற்றும் 17 தேதிகளில் சிறார் இலக்கிய முகாமினை திருவண்ணாமலையில் நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.
இந்த முகாமில் சிறுவர்களுக்கான 12 முக்கிய நூல்கள் விவாதிக்கபட உள்ளன.
1. மாகடிகாரம் – விழியன் – புக்ஸ் பார் சில்ரன்
2. வாத்துராஜா –விஷ்ணுபுரம் சரவணன்- பாரதி புத்தகாலயம்
3. சிரிக்கும் வகுப்பறை – எஸ்.ராமகிருஷ்ணன்– வம்சி பதிப்பகம்
4. பச்சைநிழல் –உதயசங்கர் – என்.சி.பி.ஹெச். வெளியீடு
5. ஜிமாவின் கைபேசி –கொ.மா.கோ.இளங்கோ –புக்ஸ் பார் சில்ரன்.
6. யானை சவாரி – பாவண்ணன் –புக்ஸ் பார் சில்ரன்
7. எண்ணும் மனிதன் – மல்பா தஹான் தமிழில் கயல்விழி அகல் பதிப்பகம்
8. குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த்- எக்சுபெரி தமிழில் வெ. ஸ்ரீராம் க்ரியா பதிப்பகம்
9. கனவினைப் பின் தொடர்ந்து- த.வெ.பத்மா- தமிழில் ஜே.ஷாஜஹான் எதிர் வெளியீடு
10. கலிவரின் பயணங்கள் -ஜோனதன் ஸ்விப்ட்- தமிழில் யூமா வாசுகி, என்.சி.பி.ஹெச். வெளியீடு
11. ஆலீஸின் அற்புத உலகம்- லூயிகரோல், தமிழில் எஸ் ராமகிருஷ்ணன். வம்சி பதிப்பகம்
12. உலகம் குழந்தையாக இருந்த போது – வெரியர் எல்வின் -NBT வெளியீடு.
அத்துடன்
• ஈசாப் துவங்கி பரமார்த்த குரு வரையிலான பல்வேறு கதையுலகங்கள் பற்றிய உரை.
• உலகப்புகழ்பெற்ற குழந்தை எழுத்தாளர்களான லூயி கரோல், சி.எஸ்.லூயிஸ், ரொவால்ட் டால், ஒசாமு டெசுகா குறித்த அறிமுகம்.
• குழந்தைகளுக்கான கதை எழுதுவது குறித்த கூட்டுவிவாதம்
• தமிழ் காமிக்ஸ் குறித்த விவாதம்.
• குழந்தைகளுடன் கதை பேசுதல்,
• தம்பிசோழனின் குழந்தைகளுக்கான நாடகம்,
• மாங்கா, மற்றும் கிராபிக் நாவல்கள் குறித்த அறிமுகம்
• ஹயாவோ மியாசகியின் அனிமேஷன் திரைப்படங்கள்
போன்ற நிகழ்வுகள் இடம் பெற உள்ளன
எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கதை சொல்லிகள், ஒவியர்கள், எனப் பல்வேறு சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள் முடியும்
பதிவுக்கட்டணம் ரூ1000.
பதிவு செய்யக் கடைசி நாள் : மே 10. 2015
தொடர்புக்கு :
வேடியப்பன்
டிஸ்கவரி புக் பேலஸ்
6 முனுசாமி சாலை கேகேநகர் சென்னை 83
தொலைபேசி எண் : 9940446650
kathaipesuvom@gmail.com

***

0Shares
0