வண்ணதாசன் கூட்டம்

நவீன தமிழ் சிறுகதையுலகின் முன்னோடி ஆளுமை, எழுத்தாளர் வண்ணதாசன் எழுதத் துவங்கி ஐம்பது ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக சந்தியா பதிப்பகமும் மதுரை அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து சிறப்பான கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது

செப்டம்பர் 7ம் தேதி மாலை 5மணிக்கு அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் உள்ள பேரவை அரங்கில் இக்கூட்டம் நடைபெற உள்ளது

அதில் வண்ணதாசன் எழுத்துலகம் குறித்து நான் சிறப்புரை ஆற்ற இருக்கிறேன்.

இந்த நிகழ்வில்  எழுத்தாளர் ச, தமிழ்செல்வன், எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குனருமான பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் லிபி ஆரண்யா, எழுத்தாளர்  சாம்ராஜ் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்

வண்ணதாசன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்துகிறார்

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

••

நாள்  : 07.09.2012  வெள்ளிக்கிழமை

இடம் : அமெரிக்கன் கல்லூரி/  பேரவை அரங்கு, மதுரை

நேரம் : மாலை ஐந்து மணி

0Shares
0