வாழ்த்துக்கள்

சுந்தர ராமசாமி விருது பெற்ற கவிஞர் இசைக்கும் ராஜமார்த்தாண்டன் விருது பெற்ற கவிஞர் போகன் சங்கருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இருவரின் கவிதைகளையும் நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.  எளிமையும், இயல்பான பகடியும், புதிய கவிமொழியும் கொண்ட இவர்கள் சமகால வாழ்வியலில் இருந்தே தங்களின் கவிதைகளை உருவாக்குகிறார்கள்.

போலி மயக்கங்களோ, மொழித்திருகல்களோ, பாவனையான தத்துவப் புலம்பல்களோ, வறட்டு உபதேசங்களோ இவர்களிடம் கிடையாது.

இசையின் கவிதைகளை கலாப்ரியாவின் தொடர்ச்சியாகவே கருதுகிறேன்.

போகன் சங்கரின் உரைநடையும் மிகுந்த கவித்துவமாகவே இருக்கிறது.  சமீபத்தில் போகன் சங்கர் எழுதிய வேஷ்டி என்ற பதிவை  ஒரு நண்பர் இணைப்பு அனுப்பி வைத்திருந்தார். இணையத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த எழுத்து அதுவென்பேன்.  அற்புதமாக எழுதியிருக்கிறார்

விருது பெறும் இருவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

••

0Shares
0