விருது விழா

ரஷ்யக் கலாச்சார மையத்தால் வழங்கபடும் மாக்சிம் கார்க்கி விருதை சென்னையில் நடைபெற்ற விழாவில் என் அபிமான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டது மிகுந்த சந்தோஷம் தருவதாக அமைந்திருந்தது,

இந்த விழாவில் கலந்து கொண்ட ரஷ்யத்தூதுவர் அலெக்சாண்டர் கடாகின்  Prince Alexei Saltykov’s Journeys across India”, என்ற 19ம்நூற்றாண்டு பயணநூல் ஒன்றினை  எனக்கு நினைவுப்பரிசாக வழங்கினார், சித்திரங்களின் தொகுப்பாகிய இந்தநூல் அரிய பதிப்பாகும்,

இந்த நிகழ்வினை ஒட்டி ரஷ்ய நாட்டுப்புற இசைநடன நிகழ்வு நடைபெற்றது, இது போல துள்ளல் இசையை, உற்சாகமான நடனத்தை நான் கண்டதேயில்லை,

அந்த இரவு இசைமயமாக நிரம்பி வழிந்தது,

நான் விருது பெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

•••

0Shares
0