விழா புகைப்படங்கள்

நேற்று சாகித்ய அகாதமி நிறுவன நாள் உரை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

எழுத்தாளர் மாலன் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்து சாகித்ய அகாதமி குறித்த விரிவான தகவல்களையும் ,அகாதமியின்  பன்முகச்செயல்பாடுகளையும் பகிர்ந்து கொண்டார்.

எழுத்தாளர் சா.கந்தசாமி, விருட்சம்  அழகியசிங்கர், திருப்பூர்கிருஷ்ணன், கே.எஸ், கண்ணன், ஹிந்தி பேராசிரியர் பாலசுப்ரமணியன்,  இலக்கியவெளிவட்டம் நடராசன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

சாகித்யஅகாதமியை நேரு உருவாக்கிய விதம் குறித்த அறிமுகத்துடன் அதன் அறுபத்திரெண்டு ஆண்டுகாலப் பணிகளின்  நிறைகுறைகள் பற்றி விரிவாகப்பேசினேன்.

சாகித்ய அகாதமி சென்னை அலுவலகத்தைச் சேர்ந்த  டாக்டர்  ராஜ்மோகன், இளங்கோவன் ஆகியோர் நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

0Shares
0