2019ன் சிறந்தபுத்தகங்கள்–12


ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் சுயசரிதை ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்றது. அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து எடிட் செய்து, தேவையான புகைப்படங்களைத் தேடிக்கண்டுபிடித்து  கிருஷ்ணபிரபு ‘ஒரு சிற்பியின் சுயசரிதை!’ எனத் தனி நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்நூலை சிறுவாணி வாசகர் மையத்துடன் இணைந்து காலச்சுவடு பதிப்பகம்

தனபால் சென்னை ஒவியக்கல்லூரியில் பயில்வதற்குச் சென்ற நாட்கள். ராய் சௌத்ரியோடு அவருக்கு ஏற்பட்ட நட்பு. சிற்பத்துறையின் மீது கொண்ட ஈடுபாடு. அவரோடு படித்த ஒவியர்கள், கல்லூரி படிப்பு முடித்த பிறகு நடனக்கலைஞராக அவர் நிகழ்ச்சிகள் செய்தது. அவர் உருவாக்கிய முக்கியச் சிற்பங்கள் எனத் தனபாலின் கலை ஆளுமையைச் சிறப்பாக விளக்குகிறது இந்நூல்.

சிற்பி தனபால் குறித்த சிறந்த நூலின் பதிப்பாசிரியர் கிருஷ்ண பிரபுவிற்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்

••

0Shares
0