2019ன் சிறந்தபுத்தகங்கள்–9

கவிஞரும் சிறுகதையாசிரியருமான அகரமுதல்வன் ஈழப்போர் குறித்த காத்திரமான படைப்புகளை எழுதிவருபவர்.

உலகின் மிக நீண்ட கழிவறை அகரமுதல்வனின் குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு . இதனை நூல் வனம் வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு

‘அகல்’ குறுநாவல் தடுப்பு முகாமில் மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞனின் கடந்தகால நினைவுகளையும் நிகழ்கால சிக்கல்களையும் விரிகிறது. ஓரிடத்திலும் நிலை கொள்ள முடியாத அகதியின் பரிதவிப்பை, துயரத்தைப் பேசுகிறது ‘எனக்குச் சொந்தமில்லாத பூமியின் கடல். சந்தேகத்தின் கண்கள் தன்னை எப்போதும் ஊடுருவிக் கொண்டிருப்பதை அகதி முழுமையாக உணருகிறான். அகதிக்கு மீட்சி கிடையாது. அவன் அலையவிதிக்கபட்டவன் என்கிறார் அகரமுதல்வன்.

‘உலகின் மிக நீண்ட கழிவறை  முள்ளி வாய்க்காலின் முன்னும் பின்னுமான கால மாற்றங்களைப் பேசும் முக்கியமான கதை. குளத்தில் புதைக்கப்பட்ட உடல்களுடன் புதைக்கப்பட்ட உண்மைகளும் கலந்திருக்கின்றன என்கிறார்.

போர்நிலத்தின் நினைவுகளுக்கும், புலம்பெயர்ந்த வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அகரமுதல்வன் இந்தக் குறுநாவல்களின் வழியே நீதி கேட்கும் குரலை வலிமையாக ஒலிக்கிறார்.

அகரமுதல்வனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

••

0Shares
0