எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் எழுதியுள்ள தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூலின் வெளியீட்டுவிழா அக்டோபர் 8 மாலை சென்னை தேனாம்பேட்டையில் பாரதி புத்தகாலயம் துவங்கியுள்ள புதிய கடையினுள் நடைபெறுகிறது

900 பக்கங்கள் கொண்ட பெரிய நூல். தமிழ் சிறுகதையுலகினை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.
நூலை நான் வெளியிடுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பெற்றுக் கொள்கிறார்.
அண்ணன் தமிழ்செல்வனின் நூலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவரது நிழலில் கோணங்கியோடு சேர்ந்து வளர்ந்தவன் என்பதால் அந்தப் பசுமையான நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன.
