இஸ்மாயில் கவிதைகள்

மலையாள, கன்னட இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்குத் தெலுங்கு இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமாகவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கும் சில தெலுங்கு நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்த போதும் அதிகம் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் சமீபமாகக் கவிஞர் இஸ்மாயில் கவிதைகளை வாசித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. அவர் தெலுங்கு நவீன கவிதையின் முக்கியமான கவிஞர் என்பதை உணர்ந்தேன். ஒரு கவிதையில் பறந்து செல்லும் காகத்தின் நிழலைக் கறுப்பு மௌனம் என்று இவர் குறிப்பிட்டிருப்பது கூடுதல் ஈர்ப்பை உருவாக்கியது

தத்துவப் பேராசிரியராக இருந்த முகமது இஸ்மாயில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அவரது எழுத்தோ ஜென் கவிதைகளின் பாணியில் உள்ளது. குரலை உயர்த்தாமல் சொல்ல வேண்டியதை அழகாகச் சொல்லும் கவிதைகளை எழுதியிருக்கிறார்.

ஆறு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைப் புத்தகங்கள் மற்றும் பிற மொழிகளிலிருந்து ஆறு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.

தாகூரின் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்த இஸ்மாயில் அவரது Stray birds தொகுப்பின் பாதிப்பில் அது போன்ற கவிதைகளை எழுதியிருக்கிறார்.

அன்றாட அனுபவங்கள், சிறிய தருணங்கள் மற்றும், இயற்கையின் விநோதங்களைத் தனது கவிதைகளில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.

ஹைக்கூவைத் தெலுங்கு இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது இவர் தான் என்கிறார்கள். அது போலவே போல் இந்தப் புத்தகம் “Tanka” வடிவத்திலும் கவிதைகள் எழுதியிருக்கிறார்

இவரது கவிதைகளில் ஜன்னல் ஒரு முக்கியப் படிமமாக இடம்பெற்றுள்ளது. ஜன்னல் மூடப்படுவதற்கானதில்லை. அது எப்போதும் காண்பதற்கானதே என்று கவிதையில் ஒரு வரியை எழுதியிருக்கிறார். ஜன்னல் வழியே தெரியும் உலகம் வேறுவிதமானது. அது நம்மை மறைத்துக் கொண்டு உலகை அறியச் செய்கிறது.

1928 இல் பிறந்த இஸ்மாயில் காக்கிநாடா PR. கல்லூரியில் தத்துவ விரிவுரையாளராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார் அவரது மறைவு பற்றிச் செய்தி கூட எவ்வளவு அழகாக எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்

நவம்பர் 25, 2003 அன்று அவர் நித்திய மௌனத்தில் மூழ்கினார்

*

GODAVARI AT BALUSUTIPPA

Endless is the river

Endless is the sky

Which is the river

And which is the sky?

The lone fisherman’s oar

Divides the sky by a river

Leaving as a remainder

A zero, the size of a universe

•••

AFTER BURYING THE SUN

Having buried the sun

Taking a bathe in the canal

Departs dusk

Returning home

Lighting chulha

My wife wakes up the sun.

Having slept all night

Warmly in my stomach

The next day the Sun rises

Resplendent in the East.

••

Window

Opening the window

While dusting the cobwebs,

I saw

A beautiful face

Flashing a twinkle.

Hereafter this window shall not be closed.

Windows are for vision

Not for keeping shut.

•••

Little girl’s smile

Returning from play in dust

This little girl is laughing

She is dust-smeared

Not her smile.

•••

Tree – My Ideal

Like the arrow

That leaves the tree’s bow

Wonders the little bird

Trying to open the earth’s secret

Like the screw in the cork

The insect

Half insect, half the little bird

Entering earth opening it

Holds the branches, the tree

••••

Our Old House in the Village

People underwent a change

Only the mud did not

After walls collapsed

Trees sprouted embracing them

Only the creeper held on

My grandpa’s soul

•••

Wearing footwear

Stood the bag in water

In both the faces, joy

•••

For whom do the clouds rain

If not for children

Is it for those who save themselves without umbrellas?

•••

If the little one is kept to

Drive away the birds away

She is making friendship with crows

•••

0Shares
0