எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள்

சிறப்பு மிக்க எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களைத் திரையிடும் நிகழ்வினை சாகித்ய அகாதமி  ஏற்பாடு செய்துள்ளது

வருகின்ற ஜுலை 27  ஞாயிறு காலை முதல் மாலை வரை சென்னை அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது

இந்தத் திரையிடலில் ஜெயகாந்தன். சுனில் கங்கோபாத்தியாய, மஹா சுவேதாதேவி, வைக்கம் முகமது பஷீர். கமலா தாஸ், இந்திரா பார்த்தசாரதி ஆகிய ஆறு முக்கிய எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் இடம்பெறுகின்றன.

நிகழ்விற்கு கே.சீனிவாச ராவ் வரவேற்புரை வழங்குகிறார். கி.நாச்சிமுத்து தலைமை ஏற்கிறார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நானும் மாலன் அவர்களும் கலந்து கொள்கிறோம். அ.சு.இளங்கோவன் நன்றியுரை வழங்குகிறார்

அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

0Shares
0