துலாபாரம் படத்தில் இடம்பெற்ற இப்பாடலை இன்றெல்லாம் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். தேவராஜன் மாஸ்டர் இசையில் ஜேசுதாஸின் குரல் மனதை என்னவோ செய்கிறது
ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது,
யாரிடத்தில் கேள்வி கேட்பது
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது
ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?
ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ
பாடலின் வரிகள் மனதை மேலும் உணர்ச்சிபூர்வமானதாக்குகிறது
