சிறார் இலக்கிய முகாம்

டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் வம்சி பதிப்பகத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் வருகிற மே 16 மற்றும் 17 தேதிகளில் குழந்தைகள் இலக்கியம் குறித்து இரண்டு நாள் முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

இதில் குழந்தை இலக்கிய நூல்கள், தமிழ் காமிக்ஸ், கதை சொல்லும் நிகழ்வு , உலகப்புகழ்பெற்ற குழந்தை இலக்கியப் படைப்புகள், எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம், குழந்தைகள் சினிமா ஆகிய அமர்வுகள் இடம் பெற உள்ளன.

எழுத்தாளர்கள், கதை சொல்லிகள், ஒவியர்கள், குறும்பட இயக்குனர்கள் எனப் பல்வேறு சிறப்பு அழைப்பாளர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்

பதிவுக்கட்டணம் : ரூ 1000 (இரண்டு நாட்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம்)

பதிவு செய்யக் கடைசி நாள் : மே 10. 2015

தொடர்புக்கு :

வேடியப்பன்

டிஸ்கவரி புக் பேலஸ்

6, Munusamy Salai, K K Nagar Chennai, Chennai,  600083

தொலைபேசி எண் : 9940446650

kathaipesuvom@gmail.com

0Shares
0