கவிஞர் தேவதச்சனின் கவிதைகளைக் கொண்டாடும் விதத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றினை உயிர்மை ஏற்பாடு செய்துள்ளது.
ஏப்ரல் 23 ஞாயிறு அன்று ஆழ்வார்பேட்டையிலுள்ள கவிக்கோ மன்றத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது
கருத்தரங்கினை நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்.
நான்கு அமர்வுகளாகக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
ஞாயிறு மாலை தேவதச்சன் கவிதைகளின் முழுத்தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது
நிகழ்வு குறித்த விரிவான தகவல்கள் சில தினங்களில் அறிவிக்கபடும்.
நிகழ்வில் கலந்து கொண்டு தேவதச்சன் கவிதைகள் குறித்த உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால்
எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
writerramki@gmail.com