1961ல் பிரபஞ்சனின் முதற்சிறுகதை வெளியானது. கடந்த 55 ஆண்டுகளாக எழுதிவரும் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். அதைக் கொண்டாடும் விதமாக எழுத்துலகில் பிரபஞ்சன் 55 என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29 சனிக்கிழமை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதில் பிரபஞ்சன் படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு. புகைப்படக்கண்காட்சி, மற்றும் நாடகம், குறும்படத்திரையிடல், புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது. பிரபஞ்சனின் எழுத்துலக சேவையைப் பாராட்டி சிறப்பு நிதியும் வழங்கபடுகிறது.



