1.1. 2020, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன்.
புத்தாண்டில் தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிப் பேசுவது மகிழ்ச்சி தரக்கூடியது.
தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி முன்னதாக மூன்று உரைகள் பேசியிருக்கிறேன். மூன்றும் விரிவான உரைகள். அதன் காணொளியை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்புகளை நூல்வனம் வெளியிட்டிருக்கிறது. தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் சா.தேவதாஸ். இதற்கான அறிமுகக் கூட்டத்தை நூல்வனம் ஏற்பாடு செய்துள்ளது
தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள், சைபீரிய சிறைச்சாலை இரவுகள், சூதாடுவதற்காக பேடன் பேடனில் காத்திருந்த இரவுகள், அன்னாவைக் காதலித்த இரவுகள் என்று தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையிலும் எழுத்திலும் இடம்பெற்ற இரவுகளைப் பற்றி பேச நினைத்துள்ளேன். அத்தோடு நாட்குறிப்பின் முக்கிய விஷயங்களையும் பேச இருக்கிறேன்.
நிகழ்வு நடக்கும் ப்ரண்ட்ஸ் பார்க் ஹோட்டல் வளசரவாக்கத்திலுள்ளது.
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
***