2019ன் சிறந்தபுத்தகங்கள்–10

Political History of the Madura Country J.H. Nelson மதுரையின் அரசியல் வரலாற்றை விவரிக்கும் முக்கியமான ஆவணம்.

இதனை  ச. சரவணன் மொழியாக்கம் செய்திருக்கிறார்

மதுரையின் அரசியல் வரலாறு 1868 என அந்த நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்

மதுரையைப் பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் எனப் பலரும்  ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த நாட்களில் நடந்த போர்கள். மற்றும் கிறிஸ்துவ மெஷினரிகளின் வருகை. சமய மாற்றம் சார்ந்த சண்டைகள். மதுரை நகரில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள்  இவற்றை நெல்சன் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்.

வரலாற்றில் விருப்பமுள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

0Shares
0