இலக்கியச்சுடர் விருது

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின்  மாநில மாநாடு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை குற்றாலத்தில் நடைபெற உள்ளது, அதையொட்டிக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடைபெறுகின்றன.

இதில் அக்டோபர் 1ம் தேதி காலை பத்துமணிக்கு  படைப்பும் படைப்பாளியின் அனுபவங்களும் என்ற தலைப்பில்  உரையாட இருக்கிறேன்,

இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கும் சமூகப்பணியாற்றியவர்களுக்கும் விருது வழங்கி வருகிறது,

இந்த ஆண்டிற்கான  சிறந்த புனைகதை ஆசிரியருக்கான இலக்கியச்சுடர் விருதை எனக்கு அறிவித்துள்ளது,

சிறந்த நல்லிணக்க எழுத்துப்பணிக்கான விருது எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஐந்தாயிரம் ரொக்கமும் பாராட்டுப்பத்திரமும் கொண்டது இவ்விருது,

அக்டோபர் 2 மாலை 5 மணி அளவில் தென்காசியில் உள்ள இசக்கி கல்யாண மண்டபத்தில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது

கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெறும் இடம். செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி ஐந்தருவி பைபாஸ் சாலை, குற்றாலம்.

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: