அறிவிப்புகள்

கொழும்பில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா என்று கேட்டு எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வந்தபடியே உள்ளன. நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

**

டிசம்பர் 10,11 ஆகிய இரண்டு தினங்கள் டெல்லி தமிழ்சங்கம் நடத்தும் தமிழ் இலக்கிய கருத்தரங்கில் கலந்து கொண்டு நவீன தமிழ்சிறுகதைகள் குறித்த கருத்துரை ஒன்றினை நிகழ்த்த இருக்கிறேன்.

**

விகடன் தீபாவளி மலரில் கண்ணகியோடு நடந்தேன் என்ற எனது நீண்ட பயண கட்டுரை வெளியாகி உள்ளது. சிலப்பதிகாரத்தை வாசித்தபடியே பூம்பூகார் துவங்கி கண்ணகிகோட்டம் வரை சென்ற எனது பயண அனுபவத்தின் ஒரு பகுதி அது. இந்தப் பயணம் குறித்து விரிவான புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது.

**

திருச்சியில் நவம்பர் 11 செவ்வாய்கிழமை மாலை நண்பர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தும்படியாக  களம் இலக்கிய அமைப்பு ஒரு சிறிய அமர்வினை ஒழுங்கு செய்கிறது. விருப்பமான நண்பர்கள் கலந்து கொள்ளலாம். நடைபெற உள்ள இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பினை நாளை வெளியிடுகிறேன்.

**

சினிமா எக்ஸ்பிரஸ் இதழின் சார்பாக சென்னை அரசு திரைப்படக்கல்லூரி மாணவர்களுடன் இலக்கியம், திரைக்கதை, உலகசினிமா குறித்த விரிவான உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் உரைவடிவம் இந்த இதழ் முதல் சினிமா எக்ஸ்பிரஸில் தொடர்ச்சியாக வெளியாக உள்ளது. முதல்பகுதி நேற்று வெளிவந்திருக்கிறது.

**

0Shares
0