செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று வருவதற்கு உதவியாகச் சைதாப்பேட்டைக்கும் கிண்டிக்கும் இடையே அடையாற்றில் 1726இல் முதன் முதலாகத் தரைப்பாலம் கட்டியவர் ஆர்மேனிய வணிகர் கோஜா பெட்ரஸ் உஸ்கான் .
இதற்காக அவர் 30 ஆயிரம் வராகன் செலவு செய்திருக்கிறார். அதுதான் அடையாறு மர்மலாங் பாலம். இதுமட்டுமின்றி மலை மீது ஏறுவதற்கு வசதியாக 135 படிகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் பெட்ரஸ் உஸ்கான்.
ஆர்மீனியப் பாலத்தின் காட்சியிது. தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் வரைந்த அரிய ஒவியங்களில் இதுவும் ஒன்று.
தற்போது மறைமலையடிகள் பாலம் என அழைக்கபடுகிறது