எனது பாடல்

வழியெல்லாம் இளையராஜாவின் பாடல்கள் கேட்டபடியே சென்னையில் இருந்து கன்யாகுமரி வரை காரில் சென்றேன், ஒரு சேரப்பாடல்களைக் கேட்பதில் உள்ள ஆனந்தத்திற்காகவே பயணம் போகலாம் என்றிருக்கிறது

முப்பது வருசங்களாகக் கேட்டுக் கொண்டேயிருக்கின்ற பாடல்கள் என்றாலும் அதன் புத்துணர்வும், இசை தரும் உற்சாகமான மன எழுச்சியும் அப்படியே இருக்கிறது, அதைத் தீராத மயக்கம் என்பதா. இல்லை நிகரற்ற அகத்தூண்டல் என்பதா,

வேண்டும் வேண்டும் என்று மனம் எவ்வளவு பாடலைச் சுவைத்தாலும் திருப்தியுற மறுக்கிறது,

இளையராஜா நம் காலத்தின் இசைப்பேராசான், தன்னிகரற்ற இமயம், அவரது பாடல்கள்  தமிழ்மக்களுக்கு கிடைத்த பேறு, நான் என்றும் இளையராஜா ரசிகனே

•••

எனது நண்பர் சுகா இயக்கி நண்பர் ஆர்யாவின் த ஷோ பீப்பிள்   தயா‌ரித்துள்ள  படித்துறை படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இதில் நானும் எழுத்தாளர் நாஞ்சில்நாடன், நா,முத்துகுமார் மூவரும் பாடல்கள் எழுதியிருக்கிறோம்

 நான் எழுதியுள்ள தேரோடும் வீதியிலே என்ற பாடலை சுதா ரகுநாதன் அவர்கள் பாடியுள்ளார்.

 இந்தப் பாடல் எழுதியது குறித்து இளையராஜா அவர்கள் விஜய் டிவிக்கு கொடுத்த நேர்காணலின் இணைப்பு

.Padithurai Part 1

https://www.youtube.com/watch?v=PaeiiKoPLfU

••

0Shares
0