தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்த கடவுளின் நாக்கு கட்டுரைகளை அவர் பைண்ட் செய்து வைத்திருப்பதாகவும் அதில் ஒரு கையெழுத்து வேண்டும் என்று கேட்டார்.
சென்னைக்கு வரும் போது அழையுங்கள், சந்திப்போம் என்று கூறினேன்.
கடவுளின் நாக்கு கட்டுரைகளை அவர் பள்ளியில் மாணவர்களிடம் அறிமுகம் செய்து வருவதாகவும், மாணவர்களால் விரும்பி ரசிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
எனது நூல்களில் கடவுளின் நாக்கு விற்பனையில் பெரிய சாதனை செய்துள்ளது.
இந்நூலை அதிகம் வாங்கியவர்கள் ஆசிரியர்களே.
பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய பல்வேறு கதைகள், வரலாற்று நிகழ்வுகள் இக் கட்டுரைகளில் அடங்கியிருப்பது ஒரு காரணம்.
என்னோடு தொலைபேசியில் பேசிய பழனிச்சாமி தானே ஐம்பது புத்தகங்களை வாங்கிப் பலருக்கும் பரிசளித்து வருவதாகத் தெரிவித்தார்.
அத்தோடு தனது பள்ளியில் புக் கிளப் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அதில் 50 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு கட்டுரையாக வாசித்து விவாதிக்கிறார்கள் என்றார்.
அதைக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
பழனிச்சாமிக்கு நன்றி சொன்னேன்
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில் கடவுளின் நாக்கும் இடம்பெற்றது.
தேசாந்திரி பதிப்பகம் சமீபமாக அதன் கெட்டை அட்டைப் பதிப்பினைக் கொண்டுவந்துள்ளது
கடவுளின் நாக்கு
விலை 350
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
tel : 044 23644947
Mobile : 9600034659
desanthiripathippagam@gmail.com