சிந்துசமவெளிக் குறியீடுகள்

தமிழ் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் இன்று ரோஜா முத்தையா நூலகத்தில் Dravidian Proof Of the Indus script via Rig Veda   என்ற அற்புதமான ஆய்வுரையை வழங்கினார்.  இந்த நிகழ்விற்கு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தலைமையேற்றிருந்தார்.

சிந்து சமவெளி ஆய்வில் இது ஒரு மைல்கல் என்றே சொல்வேன்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐராவதம் மகாதேவன் தொடர்ந்து சிந்துசமவெளி குறித்த தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆய்வு முடிவுகள் தமிழின் தொன்மை குறித்து புதிய வெளிச்சத்தை காட்டுகின்றன, இன்றைய உரையும் அத்தகைய ஒன்றே.

சிந்துசமவெளியின் நான்கு குறியீடுகளை எடுத்துக் கொண்டு அவை எதைக் குறிக்கின்றன என்பதை அவர் தமிழோடும் ரிக்வேதத்துடனும் பொருத்திக்காட்டி ஆய்வுப்பூர்வமாக விளக்கியபோது சிலிர்த்துப் போனேன்.

முழுமையான ஆய்வுக்கட்டுரையும் தனி நூலாக ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ 50.  அவசியம் படிக்க  வேண்டிய ஆய்வு கட்டுரையிது

Roja Muthiah Research Library

3rd Cross Road, Central Polytechnic Campus

Taramani, Chennai 600 113

Telephone: 2254 2551 / 2254 2552

0Shares
0