ஜுனியர் விகடனில் நான் எழுதி வரும் எனது இந்தியாவின் முதல்பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது,
புத்தகம் வெளியான நாள் முதல் இன்றுவரை தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், வாழ்த்துகள் எனக்கு வந்தவண்ணம் இருக்கின்றன,
வரலாற்றை வாசிப்பதில் உள்ள விருப்பமும், அறியப்படாத உண்மைகளை நோக்கிய வாசகர்களின் தேடுதலும் இப்பத்தியைத் தொடர்ந்து எழுதுவதற்கு மிகுந்த உத்வேகம் தருகின்றது
சிறப்பான வடிவமைப்புடன், நேர்த்தியாக உருவாக்கபட்டுள்ள எனது இந்தியா விகடன் பிரசுர வெளியீடாக வந்துள்ளது,
எனது இந்தியாவிற்கான அறிமுகக் கூட்டம் நான்கு முக்கிய நகரங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன,
இதன் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட முக்கிய ஆங்கிலப் பதிப்பகம் ஒன்று முன்வந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது
தேசாந்திரி வரும் மே மாதம் மலையாளத்தில் வெளியாக உள்ளது, யாமம் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகி உள்ளது,
உப பாண்டவத்தின் ஆங்கில மொழியாக்கம் முடிந்து பதிப்பகத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது
அரவான், மற்றும் உருளும் பாறைகள் ஆகிய இரண்டுநாடகங்களின் ஆங்கில மொழியாக்கம் ஒரியண்ட் பிளாக்ஸ்வான் வெளியிடாக வெளியிடப்படுவதுடன் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் ஆங்கில இலக்கியப் பாடமாக வைக்கபடவும் உள்ளது
கிறுகிறுவானம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது,
உறுபசியின் ஆங்கில மொழியாக்கம் முடிந்துவிட்டது,
இந்த ஆண்டில் எனது ஆறு புத்தகங்கள் வேறு மொழிகளில் வெளியாக உள்ளன,
•••