நவம்பர் 20 ,21 22 ஆகிய மூன்று தினங்கள் மதுரை புத்தகத் திருவிழாவில் பங்கேற்றேன்.
நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.


நவம்பர் 21 சனிக்கிழமை மாலை மதுரை நகரின் சிறப்புகள் குறித்து ஆயிரம் கதைகளின் நகரம் என்ற தலைப்பின் உரை நிகழ்த்தினேன். இதே நிகழ்வில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.

நண்பர் ஜெயமோகன் தேசாந்திரி அரங்கிற்கு வருகை தந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதற்காக என்னை வாழ்த்தினார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.

தூத்துக்குடியிலிருந்து பொன்.மாரியப்பன், ஜெயபால், ராம்குமார் உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விருதுநகரிலிருந்து அம்பாள் முத்துமணி அண்ணாச்சி. டாக்டர் வினோத் வந்திருந்தார்கள். மனுஷ்யபுத்திரன், மதுரை இரா. ரவி. ஞா. சந்திரன், செந்தில்குமார், வேணுகோபால், மதுரை சரவணன். சித்தரவீதிக்காரன், முத்துகிருஷ்ணன். சோபியா, ஆத்மார்த்தி, சுரேஷ்காந்தன், பேராசிரியர் தர்மராஜன், ஜெரோம், மணி, சிவராம், உள்ளிட்டவர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது.


புத்தகத் திருவிழாவில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கினேன். நண்பர் நாகா ஞாயிறு இரவு சிறப்பான உணவு ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு நன்றி
