நடந்து செல்லும் நீரூற்று
எனது நடந்து செல்லும் நீரூற்று சிறுகதைத் தொகுப்பின் புதிய பதிப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. இத் தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அட்டை வடிவமைப்பு. ஆர். ஹரிபிரசாத்
எனது நடந்து செல்லும் நீரூற்று சிறுகதைத் தொகுப்பின் புதிய பதிப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. இத் தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அட்டை வடிவமைப்பு. ஆர். ஹரிபிரசாத்
புதிய சிறுகதை. அக்டோபர் 2026 கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த சாக்பீஸை கீழே போட்டு இருமினான் புருஷோத்தமன். சாக்பீஸ் உடைந்து துண்டானது. அவனால் இருமலை அடக்க முடியவில்லை. வறட்டு இருமல். தொடர்ந்து இருமி இருமித் தொண்டை புண்ணாகிவிட்டது. கண்கள் ரத்தவரிகள் போலச் சிவந்து போனதுடன் தலையும் பாரமாகயிருந்தது. வெள்ளிகிழமை வரை ஓட்டிவிட்டால் இரண்டு நாள் ஊருக்குப் போய் உடம்பைச் சரி செய்து கொண்டு வரலாம் என நினைத்துக் கொண்டான். அதுவரை எப்படி வகுப்பைச் சமாளிப்பது எனத் தெரியவில்லை. வாயைத் …
பெலின் எஸ்மர் இயக்கி 2019ல் வெளியான Queen Lear ஆவணப்படம் தெற்கு துருக்கியின் மலைப்பகுதியினுள் நாடகம் நிகழ்த்துவதற்காகச் செல்லும் பெண்கள் நாடகக்குழுவின் பயணத்தை விவரிக்கிறது அர்ஸ்லான்கோய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயப் பணியில் ஈடுபடும் பெண்களில் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு நாடகக்குழுவை உருவாக்குகிறார்கள். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற கிங் லியர் நாடகத்தை நடத்துகிறார்கள். லியர் அரசனாக நடிப்பது ஒரு பெண். வெளியுலகம் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தொலைதூர கிராமங்களை நோக்கி அவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். நாடகத்தின் வழியே பாலின …
தட்சசீலா பல்கலைக்கழகம் சார்பில் எனக்குக் கௌரவ டாக்டர் பட்டம் (Honorary Doctorate ) வழங்குகிறார்கள். இதற்கான பட்டமளிப்பு விழா நவம்பர் 19 வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது சென்னை விழுப்புரம் சாலையில் திண்டிவனத்தை அடுத்த ஓங்கூரில் அமைந்துள்ளது தட்சசீலா பல்கலைக்கழகம். ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்துத் தட்சசீலா பல்கலைக்கழகத்தை உருவாக்கியுள்ளார்கள். தமிழ்நாட்டில் இயங்கி வரும் இப்பல்கலைகழகம் பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட படிப்புகளை …
நீரறியா அன்னங்கள் 2026 டிசம்பர் 25 மாலை சென்னையில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பான நீரறியா அன்னங்கள் வெளியாகிறது. இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் எனது இணைய தளத்திலும். இதழ்களிலும் வெளியானவை. சில கதைகள் ஆங்கிலம், தெலுங்கு, மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. முந்நூறு பக்கங்களுக்கும் மேலான பெரிய சிறுகதைத் தொகுப்பு. தற்போது புத்தக உருவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. •• மார்க்வெஸின் சேவற்சண்டை சர்வதேச இலக்கியம் மற்றும் …
எனது குறுங்கதைகளின் தொகுப்பான கர்னலின் நாற்காலி ஆங்கிலத்தில் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி. கர்னலின் நாற்காலி தொகுப்பிலுள்ள சில குறுங்கதைகள் மலையாளத்தில் வெளியாகியுள்ளன. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரண்ட்லைன் இதழிலும் மூன்று குறுங்கதைகள் வெளியாகியிருந்தன.
ஆண்வேஷமிட்ட பெண்ணின் கதை ஷேக்ஸ்பியர் நாடக காலம் தொட்டேயிருந்து வருகிறது. ஆல்பர்ட் நோப்ஸ் திரைப்படத்தின் கதையும் அதுவே ஆல்பர்ட் நோப்ஸ், அயர்லாந்தின் டப்ளின் நகரிலுள்ள மாரிசன் ஹோட்டலில் பணிபுரியும் ஒரு ஆங்கிலேய பட்லர் . பெண்ணாகப் பிறந்த அவர் முப்பது ஆண்டுகளாக ஒரு ஆணாகவே வாழ்ந்து வருகிறார். யாருக்கும் அவரது அடையாளம் தெரியவில்லை. ஹோட்டலில் வண்ணம் பூசும் பணியில் இருக்கும் ஹூபர்ட் பேஜ், ஆல்பர்ட்டின் ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறான். பெண்ணாக இருந்த ஆல்பர்ட், தனது 14 வயதில் பாலியல் …
நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் எழுத்தாளரான செல்மா லாகர்லாஃப் உடன் சர்.சி.வி.ராமன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன்.. 1930ம் ஆண்டு ராமன் நோபல் பரிசு பெறச் சென்ற போது எடுக்கபட்ட புகைப்படமது. நோபல் கமிட்டியின் பதினெட்டு நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராகச் செல்மா லாகர்லாஃப் இருந்தார். ஆகவே விருந்து நிகழ்வின் போது ராமனுடன் அமர்ந்திருக்கிறார். செல்மா லாகர்லாஃப்பின் அருகில் அமர்ந்திருப்பது ராமனின் மனைவி லோகசுந்தரி. மதுரையைச் சேர்ந்தவர். தீவிர இலக்கிய ஆர்வலர். மணிக்கொடி இதழுக்குச் சந்தா கட்டியிருக்கிறார். …