பசித்த ஓநாய்கள்
இத்தாலிய ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் படங்களின் பாணியில் துருக்கியில் யில்மாஸ் குனே இயக்கிய திரைப்படம் The Hungry Wolves (1969). பனிப்பிரதேசத்தில் வாழும் சிற்றூரைக் கொள்ளையர்கள் தாக்கிப் பெண்களைக் கவர்ந்து செல்கிறார்கள். பிணையக் கைதிகளாகச் சிலரைப் பிடித்து வைத்துப் பணம் கேட்கிறார்கள். அப்படிக் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் அவர்கள் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு விலை அறிவிக்கிறார். இந்தப் பணியை மேற்கொள்ளும் செர்சே மெமெட்டின் கதையைப் படம் விவரிக்கிறது. செர்ஜியோ லியோனின் திரைப்படங்களை நினைவுபடுத்தும் கதைக்களன். …
