அலமாரியில் உறங்குகிறவன்.
போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோசெக் (Slawomir Mrozek) கதை ஒன்றில் ஒருவன் தனது அறையில் உள்ள படுக்கை, பீரோ, மேஜை மூன்றும் நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருப்பதை நினைத்துச் சலிப்படைகிறான். அறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பி அலமாரியை நகர்த்தி வேறு பக்கம் வைக்கிறான். படுக்கையை அந்தப் பக்கம் திருப்புகிறான். மேஜையை ஒரமாக நகர்த்திவிடுகிறான். இந்த மாற்றம் பிடித்திருக்கிறது. ஆனால் சில நாட்களில் மீண்டும் அறையின் தோற்றம் சலிப்பை உருவாக்குகிறது. இந்த முறை அறையின் …

