இஸ்தான்புல்லின் கண்
அரா குலார் (Ara Güler) துருக்கியின் தலைசிறந்த புகைப்படக்கலைஞர். இவர் தன்னை Visual Historian என்றே அடையாளப்படுத்துகிறார். 2018ல் காலமான இவரது புகைப்படங்களை வரலாற்று ஆவணங்களாகக் கருதுகிறார்கள். இஸ்தான்புல்லின் கண் என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஓரான் பாமுக் இஸ்தான்புல் குறித்த தனது நூலில் இவரைக் குறிப்பிடுகிறார். அத்துடன் இவரது புகைப்படங்களையும் பயன்படுத்தியிருக்கிறார். புகழ்பெற்ற ஆளுமைகளை மட்டுமின்றி தினசரி வாழ்க்கை காட்சிகளையும் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார். பிக்காசோ, டாலி உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்களையும் …