Month: September 2025

காஃப்கா புதிய திரைப்படம்

அக்னீஸ்கா ஹாலண்டின் இயக்கத்தில் எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்காவின் வாழ்க்கை வரலாற்று படமாக்கபட்டிருக்கிறது. Franz 2025 படத்தின் முன்னோட்ட காட்சி சிறப்பாகவுள்ளது. இப்படம்Toronto International Film Festival ல் திரையிடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் குரல்

டேனிஷ் ரென்சு இயக்கிய சாங்ஸ் ஆஃ பாரடைஸ் காஷ்மீரின் புகழ்பெற்ற பாடகியான ராஜ் பேகத்தின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. மிக நேர்த்தியாக உருவாக்கபட்ட திரைப்படம். படத்தில் ராஜ் பேகம் நூர் பேகமாக மாற்றப்பட்டிருக்கிறார். இளமைக்கால நூர் பேகமாக நடித்துள்ள சபா ஆசாத் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அவரது உடல்மொழி மற்றும் உடகள் குருவின் முன்னால் அமர்ந்து பாடும் விதம், மேடையில் பாடும் முறை என அற்புதமாக நடித்துள்ளார். சபா ஆசாத் நிஜமான பாடகி என்பதால் அந்தக் …

காஷ்மீரின் குரல் Read More »

குற்றமுகங்கள் 21 கார்டன் மார்த்தா

மதராஸில் எடுக்கபட்ட முதல் புகைப்படம் எது, யாரைப் படம் பிடித்தார்கள் எனத் தெரியவில்லை ஆனால் கார்டன் மார்த்தா புகைப்படம் எடுத்துக் கொண்ட போது அவளுக்கு வயது நாற்பது. தனது உருவத்தை அச்சு அசலாகத் தன்னுடைய கையில் வைத்து பார்க்க முடியும் என்று அவள் கற்பனை கூடச் செய்ததில்லை. ஆகவே புகைப்படத்தை அவள் விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணாடி காட்டாத எதையோ புகைப்படம் உணர்த்திவிடுகிறது. கண்ணாடியை விட்டு நாம் நகர்ந்தவுடன் பிம்பம் மறைந்துவிடும். ஆனால் கையில் உள்ள புகைப்படம் …

குற்றமுகங்கள் 21 கார்டன் மார்த்தா Read More »

திரைப்பயணி -9

உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளித் தொடரின் 9 வது பகுதி வெளியாகியுள்ளது. இதில் LA STRADA  குறித்து உரையாற்றியுள்ளேன்

இணைய நிகழ்வு

செப்டம்பர் 6 சனிக்கிழமை மாலை எனது நூலக மனிதர்கள் புத்தகம் குறித்த மதிப்புரை நிகழ்வு இணைய வழியாக நடைபெறுகிறது. விருதை விருட்சம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் நூல் குறித்து அம்பாள் ஆர். முத்துமணி பேசுகிறார். விருதை விருட்சம் நூல் வாசிப்பு அனுபவம் -2 Time: Sep 06, 2025 07:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us05web.zoom.us/j/77727323793?pwd=epqtpVZ8vA9l9YwmIYfgQHNkSI5Wd3.1Meeting ID: 777 2732 3793Passcode: 8kraDk

மதுரை புத்தகத் திருவிழாவில்

இன்று துவங்கியுள்ள மதுரை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 205. எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும்.

நெருப்பின் சாட்சியம்

இன் தி ஃபயர் ஆஃப் வார் நியூசிலாந்து பூர்வகுடிகளான மாவோரி இனத்தின் கடைசி யுத்தத்தை மையமாகக் கொண்டது. 1864 ஆம் ஆண்டு நியூசிலாந்தில், பிரிட்டிஷ் ராணுவம் ஒராக்காவ் என்ற இடத்தில் மாவோரி படைகளைத் தாக்கியது. அந்த நிகழ்வினை தான் படம் விவரிக்கிறது. இந்தப் போர் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2, 1864 வரை தே அவமுட்டுவிலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிஹிகிஹி நகருக்கு அருகில் நடந்தது 1840 இல், மாவோரி தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் …

நெருப்பின் சாட்சியம் Read More »