Month: October 2025

விநோத ஒப்பந்தம்.

புகழ்பெற்ற டேனிஷ் எழுத்தாளர் ஈசக் டினேசன் (கரேன் ப்ளிக்சன்) வாழ்வினை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட திரைப்படம் The Pact. Bille August இதனை இயக்கியுள்ளார். இவரது Out of Africa புகழ்பெற்ற நாவலாகும். இப்படம் இரண்டு எழுத்தாளர்களுக்குள் ஏற்படும் நட்பு மற்றும் விநோத ஒப்பந்தம் பற்றியது. 1948ல் கதை நடக்கிறது. ஆப்ரிக்காவில் வாழ்ந்து திரும்பிய கரேன் தற்போது டென்மார்க்கில் வாழ்கிறார். வசதியான வாழ்க்கை. பெரிய மாளிகை. பணியாளர்கள். அவரது வீடு இலக்கியச் சந்திப்புகள் நடக்கும் மையம் போலச் …

விநோத ஒப்பந்தம். Read More »

வான்கோவை வரைதல்

துருக்கிய கலைஞர் கரிப் அய் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமான விண்மீன்கள் நிறைந்த இரவைத் தண்ணீரில் வரைகிறார். நம் கண் முன்னே மாயம் உருவாகிறது.இது “Ebru” என்று அழைக்கப்படும் ஒருவகை ஒட்டோமான் கலை, துருக்கியில் மிகவும் பரவலாக உள்ளது என்கிறார்கள் Van Gogh on Dark Water

மற்ற பாதி

புதிய சிறுகதை கையில் மாத்திரைகளை வைத்துக் கொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரத்னசபாபதி. மறதி வந்துவிட்டது. மாத்திரை சாப்பிட்டோமா இல்லையா என்று சில நாட்கள் குழப்பம் வந்துவிடுகிறது. பெரும்பாலும் அந்தக் குழப்பம் இரவு நேரம் தான் ஏற்படுகிறது. இதனால் ஒரு நாள் இரண்டுமுறை மாத்திரை சாப்பிட்டு விட்டார். மறுநாள் முழுவதும் தலைசுற்றலாக இருந்தது. ஆகவே தேதி நேரத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தைத் துவங்கினார். மாத்திரை போட்டோமா எனச் சந்தேகம் வந்தால் இந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் …

மற்ற பாதி Read More »

மருந்தாகும் பாடல்கள்

கறுப்பு வெள்ளைப் பாடல்களின் மீதான பித்து என்பது வெறும் ஏக்கம் மட்டுமில்லை. அது ஒரு நினைவுமீட்சி. யூடியூப்பில் உள்ள பழைய பாடல்களுக்குக் கீழே பின்னூட்டம் எழுதியவர்களைத் தேடிப் படிப்பது சுவாரஸ்யமானது. பலரும் உணர்ச்சிப் பெருக்குடன் கண்ணீர் மல்கப் பாடலை ரசித்திருக்கிறார்கள். சிலர் அந்தப் பாடல் இடம்பெற்ற படம் வெளியான நாள் யாருடன் எங்கே பார்த்தோம் என்பதைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்கள். வியப்பூட்டும் சில பதிவுகளும் உண்டு. இந்தப் பாடல்கள் லட்சக்கணக்கான முறை கேட்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நபர் …

மருந்தாகும் பாடல்கள் Read More »

இருள் இனிது

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள புதிய குறும்படம் இருள் இனிது. எனது சிறுகதை ஒன்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கபட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ள இந்தக் குறும்படத்தின் அறிமுகவிழா நவம்பரில் நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை மீடியா சயின்ஸ் படித்துள்ள ஹரி பிரசாத் NFDC யில் திரைப்பட படத்தொகுப்பு பயின்றுள்ளான். தற்போது தேசாந்திரி யூடியூப் சேனலை நடத்தி வருவதுடன். White Knights என்ற டிஜிட்டில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றையும் …

இருள் இனிது Read More »

கல்பனாவின் வியாழக்கிழமை

புதிய சிறுகதை. சதாசிவம் வீட்டின் முன்பு வந்து கல்பனா நின்றபோது மணி நாலு இருபத்தியாறு ஆகியிருந்தது. அவளாகத் தேர்வு செய்து எடுத்து வந்திருந்த வுதரிங் ஹைட்ஸ் நாவலை கையில் வைத்திருந்தாள். நிச்சயம் அவருக்குப் பிடிக்கக் கூடும் என்று தோன்றியது. சதாசிவம் வீட்டினை சேர்மன் ஹவுஸ் என்று அழைத்தார்கள். சதாசிவத்தின் அப்பா நகராட்சியின் சேர்மனாக இருந்தவர். அவர் யானை சின்னத்தில் நின்று தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். அதன் நினைவாக வீட்டுத் தோட்டத்தில் யானை சிலை செய்து வைத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் …

கல்பனாவின் வியாழக்கிழமை Read More »

குலேர் நுண்ணோவியங்கள்

குலேர் நுண்ணோவியங்கள் தனித்த மரபைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகக் கிருஷ்ணன் ராதையின் காதலைச் சித்தரிக்கும் இந்த வகை ஓவியங்கள் அடர் வண்ணத்தாலும் சித்திரம் வரையப்பட்ட முறையாலும் புதிய பாணியைக் கொண்டிருக்கின்றன. குலேர் ராஜ்ஜியம் உருவானது விசித்திரமான கதை. 1405 இல் பஞ்சாப்பின் காங்க்ரா ஆட்சியாளராக இருந்த ராஜா ஹரிசந்த் வேட்டைக்குச் போது தனது குழுவிலிருந்து பிரிந்து போனார். வழிதெரியாமல் அலைந்த அவர் கால்தவறி ஒரு கிணற்றில் விழுந்துவிட்டார். வேட்டைக்குழுவினர் அவரைத் தேடிச்சலித்த போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவில் ராஜா …

குலேர் நுண்ணோவியங்கள் Read More »

ஒளிரும் வானவேடிக்கைகள்

வானவேடிக்கைகளைச் சித்தரிக்கும் ஓவியங்களாகத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து, பிரமாண்டமான விழாக்கள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களில் வாணவேடிக்கைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றை விளக்கும் அரிய ஓவியங்களைக் காண முடிகிறது. முகலாய இளவரசர் தாரா ஷிகோவின் திருமணத்தைச் சித்தரிக்கும் 1633ல் வரையப்பட்ட ஓவியத்தில் இரவு வானத்தில் ஒளிரும் வானவேடிக்கைகளைக் காண முடிகிறது. ஓவியத்தில் மணமகன் தாராவும் அவரது குழுவினரும் ஊர்வலமாக ஆக்ரா கோட்டைக்கு வருகிறார்கள். அவர்களை நதிரா பானுவின் குடும்பத்தினர் எதிர் கொண்டு வரவேற்கிறார்கள். தாரா …

ஒளிரும் வானவேடிக்கைகள் Read More »