திரைப்பயணி 14
திரைப்பயணி தொடரில் Once Upon a Time in the West திரைப்படம் குறித்து உரையாற்றியுள்ளேன்
“மக்கள் ஒரு தடயமும் இல்லாமல் தொலைந்து போகிறார்கள், சில வேளைகளில் தங்கள் தடயங்களை மறைக்கிறார்கள், சிலர் மறைக்கப்பட்ட தடயங்களைக் காண்கிறார்கள். சில நேரங்களில், கிட்டத்தட்ட ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து, பின்னர் வேறு எங்காவது தோன்றி, புதிதாகக் காணாமல் போகிறார்கள். இந்த நாட்களில் அமைதிக்கும் இருளுக்கும் உள்ள உறவை எவ்வாறு விவரிப்பது? இப்போதெல்லாம் துயரமான இடங்கள் கூடப் பயங்கரமான சத்தத்தாலும், பயங்கரமான வெளிச்சத்தாலும் நிரம்பியுள்ளன“ – லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் ஹங்கேரிய நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் இந்த ஆண்டிற்கான …
எனது தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூலை வாசித்துவிட்டு தங்ககோபி என்ற மாணவன் அஞ்சல் அட்டை அனுப்பி வைத்திருக்கிறான். அதில் முதன்முறையாக தான் தபால் பெட்டியை பார்த்த அனுபவம் பற்றி எழுதியுள்ளான். படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். தற்போது அந்நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகும் தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலை காமிக்ஸ் புத்தகமாக கொண்டு வர வேண்டும் …
. ஃபெடெரிகோ ஃபெலினியின் Il bidone அவரது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். மதகுரு போல வேஷம் போட்டுக் கொண்டு கிராமப்புற விவசாயிகளை ஏமாற்றும் ஒரு மோசடி கும்பலைப் பற்றியது. ஒரு காரில் கிராமப்புறத்தை நோக்கிச் செல்லும் இந்தக் கும்பல் ஒரு விவசாயி வீட்டிற்குச் சென்று அவர்கள் நிலத்தில் ஒரு புதையல் இருப்பதாக நம்ப வைத்து நாடகம் ஆடுகிறது. அந்தச் செல்வத்தைப் புதைத்து வைத்தவன் போரில் இறந்து போய்விட்டதாகவும் புதையலை நிலத்தின் உரிமையாளரே தோண்டி எடுத்துக் கொள்ளலாம் …
இரண்டு ஆண்டுகள் நாற்பத்தி மூன்று நாட்கள் தேடி அலைந்த பிறகு சோனாபானியை துல்ஜாபூரில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். சோனாபானி ஒரு நாய். அதுவும் திருடர்களின் தூதுவனைப் போலச் செயல்பட்ட நாய். கைபா என்ற குற்றக்கும்பல் அதனைப் பழக்கியிருந்தார்கள். சோனாபானியின் கழுத்தில் ஒரு தோல்பட்டை கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு இலையைக் கட்டி அனுப்பி வைப்பார்கள். என்ன இலை. எத்தனை இலைகள் என்பதைப் பொறுத்து தகவல் மாறக்கூடியது. ஒளிந்து வாழ்ந்து வந்த கைபா கும்பல் தங்கள் வீட்டிற்குத் தகவல் தருவதற்கும், …
ஜம்னா என்பது ஒருவரின் பெயரில்லை. அது ஒரு குழுவின் அடையாளம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்கள் விதிஷாவின் தெற்கே பரவியிருந்தார்கள். அவர்கள் துறவிகளுக்கு எதிரானவர்கள். துறவிகளைத் தொந்தரவு செய்யக்கூடியவர்கள். யாத்திரைக்காகச் செல்லும் துறவிகள் இரவு நேரம் சாவடியில் தங்கும் போது அவர்களின் தண்டம், கப்பரை மற்றும் நீர்குவளைகளைத் திருடிவிடுவார்கள். திருட்டுக் கொடுத்த பொருளுக்காகத் துறவிகள் கவலைப்படக்கூடாது. புகார் அளிக்கக் கூடாது என்பது பொதுவிதி. ஆனால் தன்னுடைய பொருளை பறிகொடுத்த துறவி மிகுந்த கோபம் கொள்வான். திருடனைச் சபிக்கவும் …