Month: November 2025

நார்மனின் திட்டம்

ஹாலிவுட்டில் வங்கிக் கொள்ளை பற்றி நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. அதே கதைக்கருவைக் கொண்டு மாறுபட்ட படத்தை உருவாக்கியுள்ளார் பிரிட்டீஷ் இயக்குர் பாசில் டியர்டன். பிரிட்டிஷ் சினிமாவின் பெருமைக்குரிய படங்களில் ஒன்றாக இன்று கொண்டாடப்படுகிறது. The League of Gentlemen 1960ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம். ராணுவ அதிகாரியான நார்மன் ஹைட் The Golden Fleece, என்ற புத்தகத்தை ஏழு பேருக்கு ஏழு உறைகளில் போட்டு அனுப்பி வைக்கிறார், கூடவே பாதிக் கிழிக்கபட்ட ஐந்து பவுண்ட் நோட் ஒன்றையும் …

நார்மனின் திட்டம் Read More »

ஏழு வயது வாசகி

மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகள் பிரகதியாழினி அவளுடைய சிறு குறிப்பேட்டில் பின்வருமாறு குறித்து வைத்திருந்தாள் என அவளது தந்தை ரவி அனுப்பி வைத்திருந்தார். பள்ளி மாணவர்கள் என்னை விருப்பத்துடன் வாசிக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரகதியாழினிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அவர் தமிழில் எழுதிட பெற்றோர்கள் உதவிட வேண்டும்.

காதலின் மழை

A Season of Good Rain அழகான காதல் திரைப்படம். வசந்தகாலத்தில் உரிய நேரத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கை ஜப்பானில் உள்ளது. அதனைத் தனது கவிதையிலும் கவிஞர் து ஃபூ குறிப்பிடுகிறார். ஒரு ஆணும் பெண்ணும் எப்போது, எங்குச் சந்திக்கிறார்கள் என்பது காதலில் முக்கியம் என்பதையே படம் விவரிக்கிறது. கொரிய இளைஞரான டோங்-ஹா ஒரு கட்டிடக் கலைஞர். சீனாவில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு தனது நிறுவனம் சார்பாகச் செங்டு நகரத்தை மீண்டும் …

காதலின் மழை Read More »

இன்னொரு கவிதை -1 கவிதையின் படிக்கட்டுகள்.

ஒரு கவிதையைப் போல இன்னொரு கவிதை இருப்பதில்லை. எந்த இரண்டு கவிதைகளையும் ஒன்று போல வாசிக்கவும் முடியாது. செவ்வியல் இசையை ரசிப்பதைப் போலக் கவிதை வாசிப்பதற்கும் சில பயிற்சிகள். அடிப்படை புரிதல்கள் தேவைப்படுகின்றன. அதே நேரம் திரையிசை பாடல்களைக் கேட்பதை போல நேரடியாக மனதில் சென்று தேங்கிவிடும் கவிதைகளும் இருக்கின்றன, ஒரு கவிதையைப் புரிந்து கொண்ட விதத்தை வைத்து மற்றொரு கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பூட்டிற்கும் ஒரு சாவியிருக்கிறது. கவிதை துளையில்லாத பூட்டு. எங்கே …

இன்னொரு கவிதை -1 கவிதையின் படிக்கட்டுகள். Read More »

இனிக்கும் இருள்

எழுத்தாளர் கோ.புண்ணியவான், மலேசியா கல் மனங்களிலும் கனிவு பிறக்கும் என்பது இக்குறும்படத்தின் கதைப் பொருள். அதனை கலைநயம் குன்றாமல் கொண்டு செல்கிறார் ஹரி பிரசாத். நிலத்தை எப்படியாவது பார்வையற்ற தம்பதியினரின் தலையில் கட்டிவிடவேண்டும் என்று கண்ணையா புரோக்கரும் அவர் சகாவும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் பார்வைக்குறைவானவர்கள் என்று முதற் சந்திப்பிலேயே தெரிந்துகொள்ளும் கண்ணையா ஓரு கரிசனமான மன அசைவை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். வீட்டு மனையின் நிலப்பட்டாவை வாங்க பணம் தேவையென்று சொன்னதும் வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளும்படி சொல்கிறார்கள் தம்பதிகள். …

இனிக்கும் இருள் Read More »

ஆங்கில இதழில்

எனது கர்னலின் நாற்காலி குறுங்கதைகளின் தொகுப்பினை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறுங்கதை ஒன்று https://borderlessjournal.com இதழில் வெளியாகியுள்ளது. நன்றி டாக்டர் சந்திரமௌலி.

திணைகள் விருது விழா

திணைகள் கவிதை விருது விழா நவம்பர் 23 ஞாயிறு சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. கவிஞர் பூவிதழ் உமேஷ் விருது பெறுகிறார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விருது வழங்கி உரையாற்றுகிறேன்.

குறும்பட விழா

நேற்று ஹரிபிரசாத் இயக்கிய இருள் இனிது குறும்படத்தின் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் ஞானவேல், இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்குநர் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குறும்படம் குறித்த பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. எனது எல்லாச் செயல்பாடுகளுக்கும் துணை நிற்கும் அன்பு வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மிக்க நன்றி. எனது அழைப்பை ஏற்று வருகை தந்த அன்பு நண்பர் …

குறும்பட விழா Read More »