பறக்கத் தெரிந்த யானை
புதிய சிறுகதை. நவம்பர் 6. 2025 திவான் பூந்தானம் அந்தக் கடிதத்தைத் திரும்பவும் படித்துப் பார்த்தார். கொச்சியிருந்து ரெசிடெண்ட் வில்லியம் டக்ள்ஸ் அதனை அனுப்பியிருந்தார். அதில் இந்தியாவின் பேரரசியும் இங்கிலாந்தின் மகாராணியுமான விக்டோரியா கால்மூட்டு வீக்கத்தால் அதிகம் வலியை அனுபவித்து வருவதாகவும் அதற்கு வைத்தியம் செய்வதற்காக நெல்லியடி ஆசான் மாடப்பனை உடனே லண்டன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூடவே. தேவையான பச்சிலைகள் மற்றும் உதவியாளர்களை அனுப்ப வேண்டும். அவசரக் காரியம். என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நெல்லியடி எங்கேயிருக்கிறது …
