Month: November 2025

பெத்ரோவின் உலகம்.

மெக்சிகோவின் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற சிறார்களையும் அவர்களின் குற்றச் செயல்களையும் சித்தரிக்கிறது Los Olvidados. லூயி புனுவல் இயக்கிய இந்தத் திரைப்படமே பின்னாளில் உலகின் கவனத்தைப் பெற்ற City of God போன்ற படங்களுக்கான அடிப்படை. பதின் வயதுப் பையன்களின் உலகை மிகவும் அசலாகப் படமாக்கியிருக்கிறார் புனுவல். ஒளிரும் நகரவாழ்க்கையின் மறுபக்கமாக இது போன்ற இருண்ட உலகம் இயங்கிக் கொண்டிருப்பதைப் புனுவல் தான் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஏழ்மையும் வறுமையும் கொண்ட வாழ்க்கையில் அவர்கள் …

பெத்ரோவின் உலகம். Read More »

பி.எம். மூர்த்தி : வல்லினம் விருது.

எனது நேசத்திற்குரிய நண்பரும் மலேசியாவின் மிகச்சிறந்த கல்வியாளருமான பி.எம். மூர்த்தி இந்த ஆண்டிற்கான வல்லினம் விருது பெறுகிறார். டிசம்பர் 21 அன்று மலேசியாவில் வல்லினம் விருதளிப்பு நடைபெறுகிறது. பி.எம். மூர்த்திக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். மலேசிய தேர்வு வாரியத்தின் உதவி இயக்குநராக மூர்த்தி மேற்கொண்ட பணிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. அவரது விருது விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஆனால் டிசம்பர் 25 எனது …

பி.எம். மூர்த்தி : வல்லினம் விருது. Read More »

கனவு தடவப்பட்ட ரொட்டி

விட்டோரியா டிசிகா சிறந்த நடிகர். சர்வதேச அளவில் அவர் இயக்கிய திரைப்படங்களுக்குக் கிடைத்த கவனம் அவரது நடிப்பிற்குக் கிடைக்கவில்லை. இத்தாலிய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கினார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நாடகவுலகில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் என்பதாலே அவர் இயக்கிய படங்களில் பிற நடிகர்களிடம் சிறப்பான வெளிப்பாட்டினைப் பெற முடிந்திருக்கிறது விட்டோரியோ டி சிகா சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதில் பெரிய தொகையை இழந்திருக்கிறார். அவர் தயாரித்த திரைப்படங்கள் வசூல் மழையைக் கொட்டின. …

கனவு தடவப்பட்ட ரொட்டி Read More »

இருள் இனிது குறும்பட விழா

எனது மகன் ஹரிபிரசாத் இயக்கியுள்ள இருள் இனிது குறும்படத்தின் திரையிடல் மற்றும் அறிமுகவிழா நவம்பர் 14 வெள்ளிக்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஞானவேல், இயக்குநர் துரைசெந்தில்குமார், இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்குநர் பொன்குமார் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••

விநோதமான மனிதர்களின் உலகம்

  இர.மௌலிதரன் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு இந்த 2025-லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது ? என்ற கேள்வி கொடுத்த ஆர்வத்தில் தான் இந்த தொகுப்பை தேர்ந்தெடுத்தேன் . ஒவ்வொரு முறையும் ஒரு அனுபவமிக்க எழுத்தாளரின் சமகால படைப்பை வாசிக்கும்பொழுது அ .முத்துலிங்கம் அவர்களின் ஒரு வரி எங்கிருந்தாலும் வந்து என் மனதில் அமர்ந்துவிடும் . 100 நாற்காலிகளை செய்த ஒரு தச்சனுக்கு 101 ஆவது நாற்காலி செய்வது …

விநோதமான மனிதர்களின் உலகம் Read More »

பறக்கத் தெரிந்த யானை

புதிய சிறுகதை. நவம்பர் 6. 2025 திவான் பூந்தானம் அந்தக் கடிதத்தைத் திரும்பவும் படித்துப் பார்த்தார். கொச்சியிருந்து ரெசிடெண்ட் வில்லியம் டக்ள்ஸ் அதனை அனுப்பியிருந்தார். அதில் இந்தியாவின் பேரரசியும் இங்கிலாந்தின் மகாராணியுமான விக்டோரியா கால்மூட்டு வீக்கத்தால் அதிகம் வலியை அனுபவித்து வருவதாகவும் அதற்கு வைத்தியம் செய்வதற்காக நெல்லியடி ஆசான் மாடப்பனை உடனே லண்டன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூடவே. தேவையான பச்சிலைகள் மற்றும் உதவியாளர்களை அனுப்ப வேண்டும். அவசரக் காரியம். என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நெல்லியடி எங்கேயிருக்கிறது …

பறக்கத் தெரிந்த யானை Read More »

சென்னை : வரலாறும் வாழ்க்கையும்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் சார்பில் துவங்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. நவம்பர் 7 வெள்ளிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்குப் புத்தகப் பூங்கா அரங்கில் சென்னை : வரலாறும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன். இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.