மழையை ருசிக்கும் சிறுமி
தெலுங்குச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். 1973ல் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. அதில் எழுத்தாளர் திரிபுரநேனி கோபிசந்த் எழுதிய பாசம் என்ற கதை விவசாயி ஒருவரின் வாழ்க்கையை விவரிக்கிறது. திரிபுரநேனி கோபிசந்த் சிறந்த தெலுங்கு எழுத்தாளர். பத்து நாவல்கள், பன்னிரண்டு நாடகங்கள், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளார். ஜோகய்யா என்ற விவசாயிக்கு மூன்று மகன்கள். பேரன் பேத்தி எனப் பெரிய குடும்பம்.. அவரது மனைவி நோயாளியாக மரணப் படுக்கையில் கிடக்கிறார். ஜோகய்யாவிற்கு நிறைய நிலமிருக்கிறது. …
