அன்றும் இன்றும்.
தி நியூயார்க்கர் இதழின் நூற்றாண்டினை முன்னிட்டு அது கடந்த வந்த காலத்தை ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார்கள். மார்ஷல் கரி இதனை இயக்கியுள்ளார். நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி இதுவரை தி நியூயார்க்கரில் வெளியான சிறுகதைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படம் நியூயார்க்கர் இதழ் யாரால் எப்படித் துவங்கப்பட்டது. அதன் பிரபலமான ஆசிரியர்கள் மற்றும் தேர்வு முறை, வெளியீட்டில் காட்டும் துல்லியம் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளது. நியூயார்க்கர் அமெரிக்க உயர்குடியின் ரசனைக்குரியது என்ற விமர்சனத்தையும் கூட …
