Day: December 9, 2025

கவிதைகள் : சில பார்வைகள்

எனது கவிஞனும் கவிதையும் நூல் குறித்து மதிப்பிற்குரிய வெ. இறையன்பு IAS தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ராணி வார இதழில் அவர் எழுதி வரும் தொடரின் ஒரு பகுதியாக இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. இறையன்பு அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. நன்றி வாராந்திரி ராணி.

டிசம்பர் 25 புதிய புத்தக வெளியீடு

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 வியாழன் மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது ஐந்து நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. குற்றமுகங்கள் குற்றம் என்பது ஒரு ரகசிய முகமூடி. அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு குற்றங்களைப் புனைவின் வழியே புதிய கதைகளாக்கியிருக்கிறேன்.