பொம்மைகளின் பேரரசன்
எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 வியாழன் மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது ஐந்து நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. பொம்மைகளின் பேரரசன் சிறார்களுக்கான புனைகதை. இதில் வரும் பொம்மைகளின் பேரரசன் முடிவில்லாத பயணத்தை மேற்கொள்கிறான். அவன் சொல்லும் கதைகளின் வழியே விசித்திரமான வாழ்க்கையும் மனிதர்களும் அறிமுகமாகிறார்கள். நட்சத்திரங்களின் வீட்டைத் தேடும் ஆடும். கதை கேட்கும் மீன்களும், முதலையை வரையும் ஓவியனும். எரிமலைக்குள் கதை சொல்லும் பூர்வகுடிகளும் …

