Day: December 27, 2025

கெஞ்சிக் கதை / உலகின் முதல்நாவல் உரை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானிய மொழியில் லேடி முரசாகி எழுதிய கெஞ்சிக் கதை நாவல் குறித்து சிறப்புரை ஆற்றினேன். 1300 பக்கங்களுக்கும் மேலான இந்த நாவலுக்கு மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. தமிழில் இந்த நாவலின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அது முழுமையானதில்லை.

புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்

டிசம்பர் 25 மாலை எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய இளைஞர்கள். திருப்புகழ் ஐஏஎஸ் நூல்களை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்தினார். கவிஞர் ஷங்கர ராம சுப்ரமணியன் குற்றமுகங்கள் குறித்து செறிவான உரையை நிகழ்த்தினார். இந்த உரை அகல் இணைய தளத்தில் தனிக்கட்டுரையாக வெளியாகியுள்ளது நிலக்கோட்டை ஸ்ரீதர் எனது சிறுகதைகள் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. நிகழ்வில் ஆயிரம் ஆண்டுகளுக்கு …

புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள் Read More »