துஞ்சன் இலக்கியவிழா
மலையாள மொழியின் தந்தையாகப் போற்றப்படும் துஞ்சத்து ராமானுசன் எழுத்தச்சனின் நினைவாக, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர், துஞ்சன் பறம்பில் ஆண்டுதோறும் துஞ்சன் இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. இதில் கலைநிகழ்ச்சிகள். இலக்கிய அமர்வுகள். புத்தக வெளியீடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு நடைபெறும் துஞ்சன் இலக்கியவிழாவைத் துவக்கி வைக்க அழைக்கப்பட்டிருக்கிறேன். ஜனவரி 2 திரூரில் நடைபெறும் இலக்கிய விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறேன். இந்த இலக்கிய விழா ஜனவரி 6 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதில் மலையாளத்தின் …
