ஐந்தாவது எம்.ஏ.

புதிய சிறுகதை. டிசம்பர் 30 அம்மா சமையலறையின் விளக்கை போட்டிருந்தார். அது ஹாலில் படுத்திருந்த வள்ளியின் கண்களைக் கூசியது. கலைந்த உறக்கத்தினுடாக அவள் போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டாள். மணி நாலாக இருக்ககூடும். அலாரம் வைக்காமலே அம்மா தினமும் நான்குமணிக்கு எழுந்து கொள்கிறாள். சமையலறையினுள் கிரைண்டரை ஒட்டிய சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தனது பாடங்களைப் படிக்க ஆரம்பிப்பாள். உதடு அசையாமல் கண்கள் வரிகளைக் கடந்து செல்லும். ஊசியால் எம்பிராய்டரி வேலை செய்வது போலப் பாடங்களை மனதில் …

ஐந்தாவது எம்.ஏ. Read More »