குற்றமுகங்கள்
காலனிய காலத்தின் குற்றங்களை முன்வைத்து நான் எழுதிய புனைவுகளின் தொகுப்பு குற்றமுகங்கள். இந்த நூல் குறித்து கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் சிறப்பான மதிப்பீட்டை எழுதியுள்ளார். அகல் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி ••• எஸ். ராமகிருஷ்ணனின் குற்றமுகங்களில் வரும் சம்பவங்களும், நாயக, நாயகியரும் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்கள் வரை வாழ்ந்தவர்கள். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய அதே காலப்பகுதியில், இந்தியாவை ஆள்வதற்காக வந்த …
